இலங்கை நல்லிணக்க சட்டம்
இலங்கையில் மத, இன, சாதி மற்றும் சிவில் ஐக்கியத்துக்கான
நல்லிணக்கச் சட்டம்

ஒரு வரைவூப் பத்திரம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்தின்
கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது

கௌரவ கரு ஜயசூரிய

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு ஜுலை மாதம் எட்டாம்
திகதியாகிய இன்று

சிங்கப்பூர் நாட்டின் மத நல்லிணக்கச் சட்டத்தின் பராமரிப்பு
(அத்தியாயம் 167யூ)
மாதிரியைத் தழுவியது

(மூலச் சட்டவாக்கம்: 1990 ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க சட்டம்)
திருத்திய பதிப்பு: 2001 ஜுலை 31

நான்காம் திருத்தம்: 2019 ஜுலை 03

பகுதி I

பூர்வாங்கம்

பிரிவு

 • சுருக்கம் மற்றும் முன்னுரை
 • 1. குறுகிய தலைப்பு மற்றும் பொருள்கோடல்
 • பகுதி II

  நல்லிணக்க சபையொன்றை தாபித்தல்

 • 2. சபையொன்றைத் தாபித்தல்
 • 3. சபையின் பணிகள்
 • 4. அங்கத்தவர் உத்தரவாதம்
 • 5. இரகசியம்
 • பகுதி III

  ஒழுங்குகளைக் கட்டுப்படுத்தல்

 • 6. தடுத்தல் கட்டளைகள்
 • 7. அபராதங்கள்
 • பகுதி IV

  வெளியீடு

 • 8. வெளியீடு
 • 9. ஊடக ஒழுங்குவிதி
 • 10. சட்டமா அதிபதி அவர்களின் சம்மதம்
 • 11. சவாலுக்கு உட்படுத்த முடியாத சட்டத்தின் கீழான தீர்மானங்கள்
 • 12. ஒழுங்குவிதிகள்
 • இலங்கையில் மதம், இன, சாதி மற்றும் சிவில்
  ஐக்கியத்துக்கான
  நல்லிணக்கச் சட்டம்

  மேலோட்டம்

  இந்த வெள்ளைப் பத்திரம்இ நான்கு இனங்களையூம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றஇ தனியார் மற்றும் வியாபாரத் துறைஇ கல்விசார் மற்றும் துறைசார் வல்லுனர்கள் போன்றௌர்களிலிருந்து இலங்கை மக்களை உள்ளடக்கிய சிவில் சமூகத்தின் ஒரு சுயாதீனக் குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கின்றது.

  குறிக்கோள்

  ‘சகிப்புத்தன்மையூள்ள சமூகமொன்றைப் பேணுவதற்குஇ சமூகம் சகிப்புத்தன்மை இன்மையை சகித்துக்கொள்ளாததாக இருக்க வேண்டும்’
  கார்ல் பொப்பர், சகிப்புத் தன்மையின்மையின் முரண்பாடு

  இலங்கையில் உள்ள சகல மதங்கள்இ இனங்கள்இ சாதிகள்இ மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் இனங்களுக்கிடையிலானஇ கலாசாரங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு மதங்கள்இ இனங்கள்இ சாதிகள்இ மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் பகைஇ வெறுப்புஇ கெட்ட எண்ணம் அல்லது விரோதப் போக்கான உணர்வூகளை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்குமாகும்.

  அக்கறைதாரர்கள்

  சகல இலங்கையர்கள்

  முன்னுரை

  இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற கொடூரமான மற்றும் துன்பியல் தற்கொலைத் தாக்குதலின் பின்னர், இனரீதியான நல்லிணக்கமின்மையின் இடையூறான போக்கைத் தீர்ப்பதற்கு அவசரத் தேவையை உருவாக்கியூள்ளது. வெறுக்கத்தக்க, பகைமையான மற்றும் கெட்ட எண்ணம் என்பவற்றின் பரவூதலின் காரணமாக மரணம், வன்முறை, கோபம், நம்பிக்கையின்மை மற்றும் பயம் என்பவற்றுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதோடு அது எமது நாட்டைக் கூறுபடுத்தியதன் விளைவாக எமது நாட்டின் பொருளாதாரத்தையூம் மோசமாகப் பாதித்துள்ளது. இவ்வாறான நிலைமைகளில் அத்தகைய இக்கட்டான நிலைமைக்கு எமது நாடும் மற்றும் எதிர்கால சந்ததிகளும் முழுமையாக மூழ்கடிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கு, மத, இன, சாதி மற்றும் சிவில் வேற்றுமை இனிமேலும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது மற்றும் அத்தகைய வேற்றுமையான விடயத்தில் ஈடுபடுகின்ற மற்றும் அதனைத் தூண்டுகின்ற விடயங்களில் மும்முறமாக ஈடுபடுகின்ற நபர்களுக்கு பாதிப்புக்கள் இருக்கும் என்பதையூம் உறுதி செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

  முதலாவதாக எழக்கூடிய வினா என்னவென்றால், இந்தப் பிரச்சினை தொடர்பில் போதிய சட்டம் இலங்கையில் இல்லையா என்பதாகும்?

  2007ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் (ICCPR Act) இவற்றுக்கிடையில், பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டுதலை ஏற்படுத்துகின்ற போரைப் பிரச்சாரம் செய்யவோ அல்லது தேசிய இன அல்லது மத வெறுப்பை ஆதரிக்கவோ கூடாது எனக் குறிப்பிடப்படுகின்றது என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த ஏற்பாட்டை மீறுவதன் காரணமாக குற்றவாளியாகக் காணப்படுகின்ற ஒரு ஆள் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேற்படாத காலத்துக்காக கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  சமத்துவத்துக்கான உரிமையூம் எமது அரசிலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனம், மதம், போன்ற அடிப்படையில் எந்தவொரு பிரசையூம் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என அரசியலமைப்பின் 12(2)ஆம் உறுப்பரை குறிப்பிடுகின்றது. இந்த சட்டவாக்கத்தின் நிலைபேறான தன்மையில் ஏதேனும் எவ்வாறு இருந்த போதும், இலங்கையில் நல்லிணக்கம் என்ற விடயத்தை விசேடமாக குறிப்பிடுகின்ற சட்டம் ஏதும் இல்லையென்பது எமது கருத்தாகும். ஐக்கியம் மற்றும் சகிப்புத் தன்மை என்ற எண்ணக் கருக்கள் சகல பிரசைகள் மத்தியிலும் கட்டியெழுப்பப்பட வேண்டுமாக இருந்த போதும், துரதிர்ஷ்டவசமாக அது தற்போது நடைமுறையில்; இல்லை என்பதோடு, எனவே எத்தகைய சூழ்நிலைகளின் கீழும் வெறுப்பு மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்பவற்றை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என உத்தரவாதமளிக்கின்ற ஒரு சட்ட வரம்பை தௌpவாகத் தாபித்து உருவாக்குவதற்கு கட்டாயமாக நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

  “பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள் மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக் கிடையில் பகைமை, வெறுப்பு, கெட்ட எண்ணம் அல்லது விரோதம் போன்ற உணர்வூகளை” ஏற்படுத்துகின்ற தவறொன்றை செய்பவருக்கு தற்போது இலங்கையில் சட்டவாக்கம் ஏதுமில்லை, என்பதோடு எனவேதான் இந்த நல்லிணக்க சட்டம் அத்தகைய வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யூமென எதிர்பார்க்கப்படுகின்றது.

  மேலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR Act) கீழ் வன்முறைகளை தீர்மானிப்பதற்கு (இலங்கை அரசியலமைப்பு சபையால் பரிந்துரைக்கப்பட்டு ஊருவாக்கப்பட்ட தனிப்பட்டவர்கள்) ஒரு சுயாதீன குழுவாக பணியாற்றக் கூடிய ஒரு நல்லிணக்க சபையை உருவாக்குவதற்கு வேண்டுவதனால் குறிப்பிட்ட சட்டத்திலிருந்து நல்லிணக்க சட்டத்தை வேறுபடுத்தி அறியக் கூடியதாக இருக்கும்.

  இன்றைய சூழமைவில், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் இனவாதம் என்பன அதிகரிப்பது வழக்கமாகி வருவதனால், இந்த நல்லிணக்க சட்டத்தை அறிமுகம் செய்வதன் மூலம் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் இனவாதம் என்பவற்றின் சகிப்புத்தன்மையின்மையானது சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட மாட்டாது என்ற தெளிவான செய்தியொன்றை வழங்குமென நாம் நம்புகின்றோம்.

  பாரியளவு சேதம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதோடு பொதுவாக இலங்கையின் பொருளாதாரத்தின் மீதும் மற்றும் முழு சமூகத்தின் மீதும் அண்மைய நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்ற மிகப் பெரிய தாக்கத்தை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், நல்லிணக்க சட்டத்தை சட்டவாக்கம் செய்தலானது எமக்காகவூம் மற்றும் வரக்கூடிய எதிர்கால சந்ததிகளுக்காகவூம் எமது நாட்டை மீள் ஐக்கியமாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல் என்பவற்றை நோக்கிய முதலாவது படிமுறையாக இருக்குமென நாம் உறுதியாக நம்புகின்றௌம்.

  இலங்கையில் மதம், இன, சாதி மற்றும் சிவில்
  ஐக்கியத்துக்கான
  நல்லிணக்கச் சட்டம்

  பகுதி I

  சுருக்கம்

  மதம், இனம், சாதி மற்றும் சிவில் ஐக்கியம் மற்றும் சகல வடிவங்களிலுமான தொடர்பாடல் மற்றும் வெளிப்படுத்தல் என்பவற்றில் வெறுப்பைத் தணித்தல் என்பவற்றுக்கு இடமளிப்பதற்கான ஒரு சட்டம்.

  குறுகிய தலைப்பு

  இந்தச் சட்டமானது இலங்கையின் நல்லிணக்கச் சட்டம் என எடுத்துரைக்கப்படலாம்.

  பொருள்கோடல்

  இந்தச் சட்டத்தில், சூழ்நிலை வேறுவகையில் வேண்டாத வரை:

  “சபை” என்பது மதம்இ இனம்இ சாதி மற்றும் சிவில் ஐக்கியம் என்பதற்கான தேசிய நல்லிணக்க சபை எனப் பொருள்படும்.

  “வெளியீடு” என்பது ஏதேனும் செய்திமடல், நாளேடு, பருவகால வெளியீடு, புத்தகம், திரைப்படம், காணொளி, ஒலிப்பதிவூ அல்லது அதன் உருவமைப்பினால், வடிவத்தினால், அமைப்பினால் அல்லது ஒலியினால்; ஏதேனும் ஒலிப்பதிவை அல்லது பார்வையிடக் கூடிய பிரதிநிதித்துவத்தை செய்யக் கூடிய அல்லது ஏதேனும் ஏனைய முறையில் சொற்களை அல்லது கருத்துக்களை முன்மொழிவதற்கு இயலுமையூடையவற்றை உள்ளடக்கிய ஏதேனும் எழுத்து மூல, புகைப்பட, செவிப்புல அல்லது அச்சிடப்பட்ட விடயம் மற்றும் ஏதேனும் வெளியீட்டின் சகல பிரதிகள் மற்றும் மீள் தயாரிப்பு அல்லது விளைவாந்தன்மையூடைய மீள் தயாரிப்பு என்பவற்றை உள்ளடக்கும்.

  “மத இஸ்தாபனம்” என்பது ஒரு விகாரை, தேவாலயம், கெதட்ரல், செபல், சரணாலயம், மஸ்ஜித், கோவில் அல்லது ஏனைய மத ரீதியான வணக்கத்துக்குரிய அல்லது மத நடைமுறை மேற்கொள்கின்ற இடம் எனப் பொருள்படும்.

  “மதரீதியான குழு” என்பது பின்வருனவற்றை உள்ளடக்குகின்றது:

 • அ) 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் அல்லது ஏதேனும் மதம், மதரீதியான வழிபாட்டை ஊக்குவிக்கின்ற நோக்கத்துக்காக அல்லது மதரீதியான அலுவல்களைக் கையாளுகின்ற அல்லது மத நம்பிக்கையை எடுத்து நடக்கின்ற, நடாத்துகின்ற, கற்பிக்கின்ற அல்லது பிரச்சாரம் செய்கின்ற நோக்கத்துக்காக ஏதேனும் ஏனைய எழுத்து மூல சட்டத்தின் கீழ் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட ஏதேனும் கம்பனி அல்லது ஏனைய கூட்டாண்மை நிறுவனம் மற்றும்
 • ஆ) 1891ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைகள் சட்டத்தின் கீழ் பதிவூ செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் நோக்கம் ஏதேனும் மதம், மத வழிபாடு அல்லது நடைமுறை, நடத்தை கற்பித்தல் அல்லது ஏதேனும் மத நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்தல் போன்ற நோக்கத்தைக் கொண்ட ஆட்களின் ஏதேனும் அமைப்பு என்பதாகும்.
 • “சனாதிபதி” என்பது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி எனப் பொருள்படும். பிரதமர் என்பது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் எனப் பொருள்படும்.
 • பகுதி II

  மத, இன, சாதி மற்றும் சிவில் ஐக்கியத்துக்கான ஒரு நல்லிணக்க சபையைத் தாபித்தல

  சபையைத் தாபித்தல்

 • (i) மத, இன, சாதி மற்றும் சிவில் ஐக்கியத்துக்கான தேசிய நல்லிணக்க சபையானது தலைவர் ஒருவர் உட்பட 6 இற்கு குறையாத மற்றும் 10 இற்கு மேற்படாத அங்கத்தவர்களை உள்ளடக்கிய குழுவொன்றைக் கொண்டிருக்கும்.
 • (ii) சபைக்கு நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் இலங்கை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சிவில் சமூகம், இனம், மதம், சாதி மற்றும் அரசியல் கட்சிகள் என்பவற்றின் சகல பிரிவூகளிலிருந்தும் கிடைக்கப் பெறலாம். நல்லிணக்க சபையானது பாலின உணர்திறன் கொண்டதாக இருக்கும். தலைவர் மற்றும் அங்கத்தவர்களை நியமித்தல் தொடர்பான விடயங்களில் அரசியலமைப்பு சபையின் தீர்மானம் இறுதியானதாக இருக்கும்.
 • (iii) நல்லிணக்க சபையின் மூன்றில் இரண்டுக்கு குறையாத அங்கத்தவர்கள் இலங்கையில் பிரதான மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகளாக இருப்பர் என்பதோடு ஏனைய அங்கத்தவர்கள் இலங்கை அரசியலமைப்பு சபையின் அபிப்பிராயத்தின்படி, இலங்கையில் பொது சேவையில், தனியார் துறையில் அல்லது மனிதநேயத்துறையில் புகழ்பெற்ற ஆட்களாக இருப்பர்.
 • (iv) 11 அங்கத்தவர்களைக் கொண்ட சபை பின்வரும் பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருக்கும்:
 • அ) 1 அங்கத்தவர் இலங்கை பௌத்த மதத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருப்பார் என்பதோடு அவர் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து இறையியல் கற்கையில் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
 • ஆ) 1 அங்கத்தவர் இலங்கை இந்து மதத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருப்பார் என்பதோடு அவர் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து இறையியல் கற்கையில் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
 • இ) 1 அங்கத்தவர் இலங்கை இஸ்லாம் மதத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருப்பார் என்பதோடு அவர் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து இறையியல் கற்கையில் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
 • ஈ) 1 அங்கத்தவர் இலங்கை கத்தோலிக்க மதத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருப்பார் என்பதோடு அவர் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து இறையியல் கற்கையில் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
 • உ) 1 ஓய்வூ பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
 • ஊ) 1 இலங்கைப் பொலிஸ் படையிலிருந்து ஓய்வூ பெற்ற அதிகாரி (சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேலான பதவி)
 • எ) 1 ஓய்வூ பெற்ற சிவில் சேவகர் (அவர் அமைச்சொன்றில்ஃ தேசிய நிறுவனம் ஒன்றில் செயலாளர் பதவியை வகித்திருக்க வேண்டும்.)
 • ஏ) 1 வியாபாரத் தலைவர் (கைத்தொழில் - தேசிய வர்த்தக சபை அல்லது அதிகார சபையில் பதிவி வகிக்கின்றஃ பதவி வகித்தவர்)
 • ஐ) 1 வியாபாரத் தலைவர் (தொழில் முயற்சியாளர் - தேசிய வர்த்தக சபை அல்லது அதிகார சபையில் பதவி வகிக்கின்றஃ பதவி வகித்தவர்)
 • ஒ) 1 இளைஞர் பிரதிநிதி (25 – 30 வயதுடையவர்)
 • ஓ) 1 இலங்கையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் உப-வேந்தர்
 • (v) நல்லிணக்க சபையின் தலைவர் மற்றும் சகல அங்கத்தவர்ளும் இலங்கை அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் மாண்புமிகு சனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுவார் என்பதோடு அவர்கள் 1 வருட காலத்துக்காகப் பதவி வகிப்பர், ஆயினும் அவர்கள் அனைவரும் மீள் நியமனம் செய்வதற்கு தகைமையூடையவர்களாக இருப்பர். நல்லிணக்க சபையின் தலைவர் மற்றும் அங்கத்தவர்கள் இலங்கையில் உள்ள சகல மதங்கள் மற்றும் இனங்கள் என்பவற்றின் சமமானதும் மற்றும் நியாயமானதுமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
 • (vi) இலங்கை அரசியலமைப்பு சபையூடன் கலந்தாலோசித்த பின்னர், சனாதிபதி அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தலைவரின் அல்லது சபையின் எவரேனும் அங்கத்தவரின் நியமனத்தைப் மீளப்பெற்றுக் கொள்ளலாம், என்பதோடு ஏதேனும் காரணத்துக்காக நல்லிணக்க சபையில் அதன் விளைவாக ஏற்படுகின்ற வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்கு அரசியலமைப்பு சபையின் அறிவூரைக்கு ஏற்ப, எவரேனும் ஆளை சனாதிபதி நியமிக்கலாம்.
 • (vii) எந்த சந்தர்ப்பத்திலும் தலைவரின் அல்லது சபையின் எவரேனும் அங்கத்தவரின் நியமனத்தைப் மீளப்பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு ஏதேனும் காரணத்துக்காக நல்லிணக்க சபையில் அதன் விளைவாக ஏற்படுகின்ற வெற்றிடத்தைப் பூர்த்தி செய்வதற்கு அரசியலமைப்பு சபையின் அறிவூரைக்கு ஏற்ப எவரேனும் ஆளை சனாதிபதி நியமிக்கலாம்.
 • (viii) பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு ஆளும் நல்லிணக்க சபையின் அங்கத்தவராக நியமிக்கப்படுவதற்கு தகைமை பெறமாட்டார்:
  1. அ)ஒரு இலங்கைப் பிரசை
  2. ஆ) 35 இற்கு குறையாத வயதையூடையவர் (உப பிரிவு (iv) j இல் குறிப்பிட்ட ஆள் தவிர்ந்த)
  3. இ) கீழே உப பிரிவூ (ix) இல் தரப்பட்ட எவையேனும் தகுதியின்மைகளுக்கு பொறுப்பற்றவராக இருத்தல்.
 • (ix)நல்லிணக்க சபை அங்கத்தவராக நியமிப்பதற்காக ஒரு ஆள் பின்வரும் சந்தர்ப்பங்களில் தகைமையற்றவராக இருப்பார்:
  1. அ) இலங்கையில் அமுலில் உள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் மன நலம் குன்றியவராக காணப்படுகின்ற அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட ஆள்;
  2. ஆ) திவாலானவர் அல்லது விடுவிக்கப்படாத வங்குரோத்துக்காரர்;
  3. இ) இலங்கையில் உள்ள நீதிமன்றம் ஒன்றினால் அல்லது ஏதேனும் ஏனைய வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றினால் குற்றவியல் தவறொன்றுக்கு குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்ற ஆள்;
  4. ஈ) வெளிநாடொன்றில் சுயமாக குடியூரிமையை பெற்றிருக்கின்ற அல்லது வெளிநாடொன்றில் குடியூரிமை உரிமைகளை பிரயோகிக்கின்ற அல்லது வெளிநாடொன்றுக்கு பற்றுரிமைப் பிரகடனம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்ற ஆள்;
  5. உ) ஏதேனும் வடிவில்/அமைப்பில் இனரீதியான மற்றும் மதரீதியான தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்ற / எந்த சந்தர்ப்பத்திலும் பரப்பியூள்ள ஆள்;
  6. ஊ) வெளிநாடொன்றில் குடியூரிமை பெற்றுள்ள ஒரு பிரசை.
 • (x)பின்வரும் சந்தர்ப்பத்தில்; அங்கத்தவர் ஒருவர் அவரது பதவியிலிருந்து விலக வேண்டும்;
  1. அ) அவர் இலங்கை குடியூரிமையிலிருந்து நீக்கப்படுதல் அல்லது அவர் வோறொரு நாட்டில் குடியூரிமையைப் பெற்றுக் கொள்தல்
  2. ஆ) அவரின் பதிவியிலிருந்து விலகுவதாக தலைவருக்கு அவரின் கையால் எழுத்து மூல கடிதம் ஒன்றை வரைதலின் மூலம்; அல்லது
  3. இ) அவர் மேலே (xi) ஆம் உப பிரிவில் குறிப்பிடப்பட்ட தகைமையீனங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஆளாகுதல்.

  நல்லிணக்க சபையின் பணிகள்

 • (i) நல்லிணக்க சபையின் பணிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:
  1. அ) பிரதமர் அவர்களினால் அல்லது நாடாளுமன்றத்தினால் சபைக்கு ஆற்றுப்படுத்துகின்ற இனரீதியான மற்றும் மதரீதியான நல்லிணக்கத்தைப் பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்: மற்றும்
  2. ஆ) பிரிவூ 6 உப-பிரிவூ (i) இன் கீழ் பிரதமர் அவர்களினால் குறிப்பீடு செய்யப்படுகின்ற கட்டளைகள் தொடர்பில் கரிசனை கொண்டு நல்லிணக்க சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
 • (ii) இந்த சட்டத்தின் கீழ் நல்லிணக்க சபையின் பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படுகின்றவாறு சபைக்கான செயலாளர் ஒருவரையூம் மற்றும் ஏனைய அலுவலர்களையூம் நியமித்துக் கொள்வதற்கான உரிமை நல்லிணக்க சபைக்கு உண்டு.
 • (iii) இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, சபையானது, 12ஆம் பிரிவூக்கு ஏற்ப, அதன் சொந்தப் நவடிக்கை முறைகளை ஒழுங்குறுத்துவதற்கான சட்டவிதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். நல்லிணக்க சபையின் நடவடிக்கை முறைகளை ஒழுங்குறுத்துவதற்கான சட்டவிதிகளை சட்டத்தின் பிரிவூ 3 உப-பிரிவூ (iii) இற்கு ஏற்ப, இலங்கை அரசியலமைப்பு சபையின் ஒருப்பாட்டுடன் நல்லிணக்க சபையினால் வரையப்படும்.
 • (iv) தலைவர் அல்லது தலைமை தாங்குகின்ற அங்கத்தவர் ஒருவர் உட்பட சபையின் அரைவாசிக்கு குறைவான அங்கத்தவர்களுக்கு குறையாத கூட்ட நடப்பெண் இல்லாமல் நல்லிணக்க சபையானது அதன் கூட்டம் ஒன்றை நடாத்தக் கூடாது.
 • (v) தலைவர் வருகை தந்திருந்தால், சபையின் சகல கூட்டங்களிலும் அவர் தலைமை தாங்க வேண்டும்.
 • (vi) தலைவரின் பதவி வெற்றிடமாக மாறுகின்ற போது அல்லது ஏதேனும் ஏனைய காரணத்துக்காக கூட்டமொன்றில் தலைவர் கலந்து கொள்ளாவிட்டால், வருகை தந்திருக்கக் கூடிய அங்கத்தவர்களில் தெரிவூ செய்யப்படுகின்ற அத்தகைய ஏனைய அங்கத்தவர் கூட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டும்.
 • (vii) பிரிவூ 2 இற்கு அமைவாக, சபையின் அங்கத்தவர்களில் ஏதேனும் வெற்றிடம் எவ்வாறு இருந்த போதும், சபையானது அதனது நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.
 • (viii) அதன் அங்கத்தவர்களை நியமிப்பதில் உள்ள ஏதேனும் குறைபாடு ஏதேனும் எவ்வாறு இருந்த போதும் அல்லது அதன் நடவடிக்கைமுறைகளில் அவ்வாறு செய்வதற்கு தகைமை இல்லாத சில ஆட்கள் அதன் நடவடிக்கையில் பங்கு பற்றியிருந்த போதும்இ நல்லிணக்க சபையின் ஏதேனும் தீர்மானத்தின் நடவடிக்கை முறைகள் வலுவூள்ளதாக இருக்கும்.
 • (ix) நல்லிணக்க சபையானது ஒவ்வொரு மாதத்திலும் ஆகக்குறைந்தது ஒரு தடவையேனும் கூடுதல் வேண்டும்.
 • அ) தேவைப்படுகின்ற போது அல்லது தேசிய நலனில் பயனுள்ளதாக இருக்கும் போது எந்த நேரத்திலும் சபையின் ஆகக் குறைந்தது மூன்று அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சபை அதன் கூட்டத்தைக் கூட்டலாம்.
 • ஆ) எவரேனும் அங்கத்தவர் தொடர்ந்து 3 கூட்டங்களில் பங்குபற்றாவிட்டால் சபையின் அங்கத்துவத்திலிருந்து நீக்கப்படுவார். நல்லிணக்க சபையில் எழுகின்ற அத்தகைய சகல வெற்றிடங்களும் சாத்தியமான விரைவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதோடு அவ்வாறு நியமிக்கப்படுகின்ற ஆள் சபையின் காலாவதியாகாத காலத்துக்காக கடமையாற்ற வேண்டும்.
 • அங்கத்தவர் உத்தரவாதம்

 • (i) சபையின் ஒவ்வொரு அங்கத்தவரும் அல்லது அதிகாரியூம்இ இந்த சட்டத்தின் நோக்கத்துக்காகஇ தண்டனைச்; சட்டக் கோவையின் கருத்துக்குள் ஒரு அரசாங்க சேவையாளர் எனக் கருதப்படும்.
 • (ii) நல்லிணக்க சபையின் தத்துவங்கள் மற்றும் பணிகள் என்பவற்றை ஏதேனும் அங்கத்தவர் ஒருவர் அல்லது அதிகாரி நல்லெண்ணத்துடனும் புரிந்த ஒரு விடயத்துக்கு ஏதேனும் வழக்கு அல்லது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதற்கு பொறுப்புள்ளவராக்கக் கூடாது.
 • இரகசியத் தன்மை

 • (i) பிரிவூ 8 இல் குறிப்பிடப்பட்ட விடயம் தவிர்ந்த சபையின் ஏனைய நடவடிக்கைமுறைகள் யாவூம் கெமரா முன்னிலையில் நடைபெற வேண்டும்.
 • (ii) அங்கத்தவர் ஒருவருக்கு பிரதமர் அவர்களினால் எழுத்து மூலம் ஏதேனும் விடயத்தை வெளிப்படுத்துமாறு அறிவிக்காத வரை, சபையின் கூட்டத்தின் பணிகளுடன் தொடர்புடைய ஏதேனும் விடயம் அல்லது கருமத்தை சனாதிபதி, பிரதமர், சபையின் செயலாளர் அல்லது சபையின் எவரேனும் அங்கத்தவர் தவிர்ந்த எவரேனும் ஏனைய ஆளுக்கு வெளிப்படுத்த அல்லது பகிரங்கப்படுத்தக் கூடாது.
 • பகுதி III

  தடுக்கின்ற கட்டளைகள்

  6.

 • (i) ஆள் ஒருவர் அல்லது ஆட்கள் பின்வரும் எவையேனும் செயல்களை புரிந்திருக்கின்றார் அல்லது புரிவதற்கு எத்தனிக்கின்றார் என பிரதமர் திருப்தியடைகின்றவிடத்து, உப-பிரிவூ (ii) இல் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக பிரசை, அலுவர், மதபோதகர், ஆயர், துரவி, இமாம், பூசாரி, பதவி வகிப்பவர் அல்லது ஏதேனும் அரச, அல்லது தனியார் நிறுவனத்தில், அமைப்பில், தொழில் முயற்சியில், மதக்குழுவில் அதிகார சபையில் பதவியில் உள்ள எவரேனும் ஏனைய ஆளுக்கு அல்லது ஏவரேனும் அதன் அங்கத்தவருக்கு எதிராக பிரதமர் தடைக் கடடளையொன்றை விதிக்கலாம்.
  1. அ) பல்வேறு மத, இன, சாதி மற்றும் சிவில் குழுக்கள் என்பவற்றுக்கிடையில் பகை வெறுப்பு தீய எண்ணம் அல்லது விரோதப் போக்கு என்பவற்றை ஏற்படுத்துகின்ற உணர்வூகள்.
  1. b) ஏதேனும் மத நம்பிக்கை, இளைஞர் வலுவூட்டல் அல்லது சனசமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பரப்புதல் அல்லது நடைமுறைப்படுத்தல் இயக்கம் அல்லது முயற்சி என்ற போர்வையில் ஏதேனும் மோசமான செயலை மேற்கொள்தல்.
 • (ii) உப-பிரிவூ (i) இன் கீழ் மேற் கொள்ளப்படுகின்ற ஒரு கட்டளையானதுஇ அதில் குறிப்பிடப்படுகின்ற ஆளுக்கெதிராக பின்வரும் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டலாம்:
  1. அ) 6ஆம் பிரிவின் உப-பிரிவூ (i) இல் குறிப்பிடப்பட்ட ஏதேனும் மத, அரச, சிவில் அல்லது தனியார் குழுவை, நிறுவனத்தை, அமைப்பை அல்லது தொழில் முயற்சியை அத்தகைய உப-பிரிவில் குறிப்பிட்ட எவையேனும் செயல்களைச் செய்வதற்கு முயல்கின்ற திட்டமிடுகின்ற அல்லது செய்வதற்கு கருத்துக்களைப் பரப்புகின்றதாக காணக்கூடிய எவரேனும் ஆளை தூண்டுதல் வழிநடத்துதல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றிலிருந்து தடுத்தல்.
  2. ஆ) 6ஆம் பிரிவின் உப-பிரிவூ (i) இல் குறிப்பிடப்பட்ட ஆட்களை தவிர அத்தகைய உப-பிரிவில் குறிப்பிட்ட எவையேனும் செயல்களைச் செய்வதற்கு முயல்கின்ற, திட்டமிடுகின்ற அல்லது செய்வதற்கு கருத்துக்களைப் பரப்புகின்றதாக காணக்கூடிய எவரேனும் ஆளை தூண்டுதல், வழிநடத்துதல் அல்லது ஊக்குவித்தல் போன்றவற்றிலிருந்து தடுத்தல்.
  3. இ) பிரதமரின் எழுத்து மூல முன் அனுமதியில்லாமல் கட்டளையில் விபரிக்கப்படக் கூடிய ஏதேனும் விடயம், தலைப்பு அல்லது கருப்பொருளில் ஏதேனும் ஒன்றுகூடுதல், திருச்சபை அல்லது வழிபாட்டாளர்கள் குழு அல்லது ஏதேனும் மதக் குழு அங்கத்தவர்கள் அல்லது நிறுவனத்தில் அவர் வாய்மொழி மூலம் அல்லது எழுத்து மூலம் பேசுவதிலிருந்து அல்லது சமர்ப்பிப்பதிலிருந்து அவரைத் தடுத்தல்.
  4. ஈ) பிரதமரின் எழுத்து மூல முன் அனுமதியில்லாமல் ஏதேனும் மதக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பிரசுரத்தை அச்சடித்தல், வெளியிடுதல், திருத்துதல், விநியோகித்தல் அல்லது எந்தவகையிலும் உதவிசெய்தல் அல்லது பங்களிப்புச் செய்தல் என்பவற்றிலிருந்து அவரைத் தடுத்தல்.
  5. உ) பிரதமரின் எழுத்து மூல முன் அனுமதியில்லாமல் ஏதேனும் மதக் குழுவின் பிரசுர ஆசிரியர் சபை ஒன்றில் அல்லது வெளியீட்டு குழுவொன்றில் பதவி வகிப்பதிலிருந்து அவரைத் தடுத்தல்.

  அபராதங்கள்

 • (i) சபையானது, அதன் சுயமான தீர்மானத்திலும் மற்றும் இலங்கை நல்லிணக்க சட்டத்தினால் நல்லிணக்க சபைக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரமும், பொது மக்கள் அக்கறையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மத, இன, சாதி மற்றும் சிவில் குழுக்களிடமிருந்து அல்லது தனிப்பட்ட அடிப்படையில் தனியார் பிரசைகளிடமிருந்து கிடைக்கப்பெற்றிருக்கின்ற முறைப்பாடுகளுக்கான அறிவித்தலை, இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு அமைவாக சட்ட நடவடிக்கை / அபராதங்கள் தொடர்பில் பிரதமரை அறிவூறுத்துவதற்கு சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
 • (ii) பிரமதமர், 48 மணித்தியாலங்களுக்கு மேற்படாத ஒரு காலப்பகுதிக்குள் நல்லிணக்க சபையின் பரிந்துரைகள் தொடர்பில் செயற்படுவதற்கு தவறினால் அல்லது முடியாதுவிட்டால், சபையானது அதன் சுயமான தீர்மானத்திலும் மற்றும் இலங்கை நல்லிணக்க சட்டத்தினால் நல்லிணக்க சபைக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரமும், இலங்கை சட்டமா அதிபதி, இலங்கை பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்புப் படைப் பிரதாணி என்பவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும்.
 • பகுதி IV

  வெளியீடு

 • 8. வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான ஏதேனும் மீளப் பெறுதல், மாற்றம், கால நீடிப்பு அல்லது அதன் உறுதிப்படுத்தல் அல்லது சபையின் எவையேனும் பரிந்துரைகள் என்பவற்றுக்கு, பிரிவூ 6 இன் கீழ் கட்டளையொன்றை பிரதமர் வழங்க வேண்டும்.
 • ஊடக ஒழுங்குமுறை

 • (i) மத, இன, சாதி மற்றும் சிவில் ஐக்கியத்துக்கான நல்லிணக்கச் சட்டம் மற்றும் நல்லிணக்க சபை என்பன:
 • அ) இலங்கையின் ஊடக நெறிகள் மற்றும் ஒழுங்கு விதிகள் சட்டத்துக்கான ஒரு பிற்சேர்க்கையை சுயமாகவே உருவாக்கும்*
 • ஆ) தொலைக்காட்சி, கேபல், திரைப்படம், வானொலி, அச்சு, டிஜிட்டல், சமூக ஊடகங்கள், மற்றும் அதில் உள்ள தொடர்புடைய உள்ளடக்கம் ஆகியவை உள்ளடங்களாக ஆனால் அவற்றுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாத விடயங்களிலிருந்து எவையேனும் / சகல ஊடகங்கள் தொடர்புடைய பொருட்களின் அபிவிருத்தியில், வெளியீட்டில், ஒலிபரப்பில், கொள்வனவில், கருத்துருவாக்குவதில் மற்றும் தயாரிப்பில் ஈடுபடுகின்ற சகல ஊடக நிலையங்கள், அமைப்புக்கள் மற்றும் கம்பனிகள் என்பவற்றோடு பங்காளராகச் செயற்படுதல்.
 • சட்டமா அதிபதி அவர்களின் சம்மதம்

 • 10. சட்டமா அதிபதியின் சம்மதம் இல்லாமல் இந்த சட்டத்தின் கீழ் எந்தவொரு தவறையூம் விசாரிக்கக் கூடாது.
 • சட்டத்தின் கீழான தீர்மானங்கள் நியாயப்படுத்த முடியாத தன்மை

 • 11. இந்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற பிரதமரினது சகல கட்டளைகள் மற்றும் தீர்மானங்கள், மற்றும் நல்லிணக்க சபையினது பரிந்துரைகள் என்பன இறுதியானதாக இருக்கும் என்பதோடு எந்த நீதிமன்றத்திலும் அவற்றை சவாலுக்கு உட்படுத்த முடியாது.
 • ஒழுங்குவிதிகள்

  12.

 • (i) நல்லிணக்க சபையின் நடவடிக்கை முறையை ஒழுங்குறுத்துவதற்கான சட்டவிதிகள், சட்டத்தின் பிரிவூ 3, உப-பிரிவூ (iii) இற்கு ஏற்ப, இலங்கை அரசியலமைப்பு சபையின் ஒருப்பாட்டுடன் நல்லிணக்க சபையினால் வரையப்படும். நல்லிணக்க சபையின் நடவடிக்கை முறையை ஒழுங்குறுத்துவதற்கான சட்டவிதிகள் அதன் பின்னர் பிரதமரின் அங்கீகாரத்துக்காகவூம் மற்றும் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காகவூம் சமர்ப்பிக்கப்படும்.
 • (ii) சட்டத்தின் கோட்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகளை பிரதமர் மேற்கொள்ளலாம்.
 • *ஊடக ஒழுக்கநெறிகள் மற்றும் ஓழுங்குவிதிகள் சட்டமானது இலங்கையில் மிகவூம் தேவைப்படுகின்ற ஓரு சட்டமாகும். வரைவூப் பத்திரம் தற்போது விருத்தி செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
  சிங்கப்பூர் ஒலிபரப்புச் சட்டம் (2012), செய்திப்பத்திரிகை மற்றும் அச்சு ஊடக சட்டம் (2002),... கட்டுப்பாட்டு சட்டம் (2008) மற்றும் சிங்கப்பூர் ஊடக அபிவிருத்தி அதிகாரச் சட்டம் (2019) என்பவற்றை மாதிரியாகக் கொண்டது.